சிங்களப் பெருந் தேசியவாதம் மேலோங்கியுள்ள கோத்தபாயவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் - ஐங்கரநேசன் - Yarl Voice சிங்களப் பெருந் தேசியவாதம் மேலோங்கியுள்ள கோத்தபாயவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் - ஐங்கரநேசன் - Yarl Voice

சிங்களப் பெருந் தேசியவாதம் மேலோங்கியுள்ள கோத்தபாயவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் - ஐங்கரநேசன்



சிங்களப் பெருந் தேசியவாதம் மேலோங்கியுள்ள கோத்தபாயவிடம் இருந்து தமிழ் மக்களுக்கான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியுமென்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பின் ராஐதந்திரம் தொடர்பிலும் விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களின் தீர்விற்காக அரசிற்கு ஆதரவளிக்கவும் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள விடயம் குறித்து குறித்து கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..

ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச அவர்கள் அடிக்கடி பெரும்பான்மைச் சமூகத்தின் உணர:வுகளுக்கு சிறுபாண்மையினர் மதிப்பளிக்க வேண்டுமென்று கூறி வருகின்றார். ஆவர் சிறுபான்மையினருக்கு இங்கு அரசியல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வுடகிழக்கில் இதுகால்வரை அபிவிருத்திகள் செய்யப்படாததே பிரச்சனைக்கான காரணமெனவும் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது இவை யாவும் களைப்பட்டு விடும் என்றும் பேசி வருகின்றார்.

நாட்டின் நிலையான அபிவிருத்தி என்பது சிறுபான்மை மக்களுக்கான நிலையான அரசியற் தீர்விலேயே தங்கியுள்ளதென்பதை இவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆல்லது உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு சிங்களப் பெருந்தேசியவாதம் அவரில் மேலோங்கி நிற்கின்றது. இந்நிலையில் இவரிடமிருந்து தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

மேலும் கடந்த அரசாங்கத்துடன் மிகவும் ஐக்கியமாக கூட்டமைப்பினர் செயற்பட்டிருந்த போதும் கூட தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட முடியவில்லை. இந் நிலையில் தமிழ் மக்களின் ஆதரவில்லாமலே தான் வெற்றி பெற்றதாக இறுமாந்திருக்கும் ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச அவர்கள் இவர்களுடைய ஆதரவை நம்பியிருப்பாரென்று சொல்வதற்கில்லை. இவர்கள் கொடுக்கும் ஆதரவு அழையாத விருந்தாளிகளின் நிபந்தனையற்ற ஆதரவாகவே இருக்க முடியும்.

கூட்டமைப்பினளர் ஐனாதிபதித் தேர்தலின் போது சஐpத் பிரேமதாசா அவர்களிற்கு பகிரங்க ஆதரவை தமிழ் மக்களிடம் கேட்காமல் விட்டிருக்கலாம்.; யுhர் யாருக்காகவோ பயந்து அதனைச் செய்த் தவறி தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலே பெரும்பான்மைச் சமூகம் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையை உருவாக்கி தமிழ் மக்களை அரசியல் அரங்கில் இவர்கள் அம்மணமாக்கிவிட்டார்கள்.

குறைந்தபட்சம் தமிழ் மக்களின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் தனியான ஒரு தேசம் என்பதை இவர்களால் நிரூபித்திருக்க முடியும். ஆரசியல் பிரச்சனைகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் சாணக்கியமாகவே வென்றெடுக்க முடியுமென்று அடிக்கடி கூறி வந்த இவர்கள் கடைசியில் தங்களுடைய சாணக்கியம் மாட்டுச் சாணம் அளவிற்குக்கூட பெறுமதியில்லாதது என்பதை நிரூபித்து விட்டார்கள் என்றார்;


0/Post a Comment/Comments

Previous Post Next Post