யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வர்த்தக சந்தையினை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடாவெட்டி திறந்து வைத்துள்ளார்.
யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக இந்த வருடம் இடம்பெறுகின்றது.
யாழ். மாநகர சபை சர்வதேச வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் ஆகியன இதற்கு ஆதரவு அளிக்கின்றது.
குறித்த வர்த்தக சந்தை திறந்து வைக்கப்படுவதற்கு முன்பு யாழ்ப்பாணம் நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
அத்தோடு யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் யாழ்.இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஜானம் ஊள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment