கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
சீனாவிலுள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்குமாறு தலாய் லாமாவிடம் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்துஇ கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம்.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்இ இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் (செவ்வாய்கிழமை) மாத்திரம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment