தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
கூட்டமைப்பிற்குள் இருந்து விக்கினேஸ்வரன் ஐயா மற்றும் சுரேஸ்பிரேமச்சந்திரன் இருவரும் மட்டுமல்லாது ரெலோவின் சிறிகாந்தா என இப்படிhன பலர் கட்சிகளாகவும் தனிநபர்களாகவும் வெளியேறியிருக்கின்றார்கள். இது நிச்சயமாக தேர்தல்களில் கூட்டமைப்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படிhன ஒரு தாக்கம் இருக்கக் கூடாதென்பதற்காக முக்கியமாக கடும்போக்காக இப்ப அரசு ஒன்று இருக்கின்ற போது தமிழ் மக்களின் ஒற்றுமைகள் குலைக்கப்பட்டால் அது இந்த அரசிற்கு இன்னும் வசதியாக இருக்கும்; என்ற அடிப்படையில் ஒற்றுமைக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஏனெனில் எங்களது ஒற்றுமை குலைகின்ற போது பெரும்பான்மைக் கட்சிகள் கூட வடகிழக்கிலே பெரும் பலமாக வரக் கூடிய சந்தர்ப்பங்கள் எல்லாம் உருவாகும். ஆகவே தான் நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று நினைக்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில் தனிப்பட்ட முறையில் நானும் செல்வம் அடைக்கலநாதனும் இந்த ஒற்றுமை என்ற விடயத்தில் அக்கறையாகக கதைக்திருக்கின்றோம். அதே போல கூட்டமைப்பு கூட்டங்களில் இந்த விடயங்கள் கதைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே நான் நினைக்கின்றேன் அவர்கள் எல்லாருமாக சேர்ந்து மீள்வும் கூட்டமைப்பிற்கு வர வேண்டும். ஆனால் கூட்டமைப்பில் இருந்த விலகியவர்கள் அனைவரும் இந்த இரண்டு மாதத்திற்குள் மீண்டும் கூட்டமைப்பாக வருவதென்பது சாத்தியக் குறைவான விசயமாகவே தெரிகிறது.
ஏனென்றால் அவ்வளவு தூரம் பிரிவுகள் வந்திருக்கிறது. இருந்தாலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இயலுமானவரை அனைவரையும் ஒன்றாக கொண்டு வர முடிந்தால் கொண்டு வர வேண்டும். ஏனெ;னறால் அதற்கான சாத்தியபாடுகள் குறித்து சொல்வது கஸ்ரமாகத் தான் இருக்கின்றது.
மேலும் கூட்டமைப்பில் இருந்த பிரிந்து சென்றால் அது கூட்டமைப்பிற்கு பாதகமாக இருக்குமென்று ஏற்கனவே நான் சொல்லியுள்ளென். அதே போல வேறு அணிகள் உருவாக்குவதும் பாதிப்பை ஏற்படுத்துமென்று தான் சொல்கிறேன். ஆனால் அவர்கள் மாற்று அணியாக உருவாகி தேர்தல்களில் போட்டியிடுகின்ற போது தான் அதனைப் பற்றி குறிப்பிட முடியும்.
ஆனால் மாற்று அணி என்பது நிச்சயமாக கூட்டமைப்பிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கும். ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்த அணி எவ்வளவு பலமானது அந்த அணி செயற்பாட்டில் ஈடுபடக்; கூடியதா அல்லது அந்த அணி தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் எவ்வளவு தூரம் தீவிரமாக இருக்கக் கூடியது என இவகைளை எல்லாம் கணக்குப் பார்த்து தான் தமது வாக்குகளை அளிப்பார்கள்.
கூட்டமைப்பு என்பது பலம் பொருந்திய கட்சி. அந்தக் கட்சியின் பலத்தை உடைத்து விடக் கூடாது என்பதை தமிழ் மக்கள் நிச்சயமாக கணக்கிலே எடுப்பார்கள். அதனடிப்படையில் தான் தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனாலும் தேர்தலில் வாக்களிப்பதும் தேர்தல்களில் போட்டியிடுவது அவர்களுடைய ஐனநாயக உரிமை.
ஆகவே ஒற்றுமை அல்லது பலம் என்ற அடிப்படையில் அனைவரும் கூட்டமைப்பில் சேர்ந்து கேட்க விரும்பினால் அது ஒரு பலமாகவே இருக்கும். அதைவிடுத்து புதிய அணிகளை உருவாக்கி தேர்தலில் போட்டியிட விரும்பினால் அந்தக் கூட்டணி எப்படிச் செயற்படப் போகிறதென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் மக்களுடைய தீர்ப்பு தானே இறுதியானது. ஆக மக்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லுகிற அந்த தீர்ப்பை யாருமே மீற முடியாது. ஆகவே அவர்களுடைய தீர்ப்பை பொறுத்திருந்த பார்ப்போம் என்றார்.
Post a Comment