சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போம் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்மந்தன் - Yarl Voice சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போம் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்மந்தன் - Yarl Voice

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போம் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்மந்தன்

எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமையவுமு; சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போம; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன். 

மேலும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போமாக எமது பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழுந்து வளமான எதிர்காலத்தினை எமது வருங்கால சந்ததி கண்டுகொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post