ஐனாதிபதி கூறியது உண்மையெனில் வடக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் - புதிய ஆளுநரிடம் குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice ஐனாதிபதி கூறியது உண்மையெனில் வடக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் - புதிய ஆளுநரிடம் குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice

ஐனாதிபதி கூறியது உண்மையெனில் வடக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் - புதிய ஆளுநரிடம் குகதாஸ் வலியுறுத்து

தமிழ் மக்களின் வேதனைகள் மனக் காயங்களை போக்கும் வகையில் பணியாற்றுமாறு உண்மையில் ஐனாதிபதி கூறியிருப்பாராயின் வடக்கு எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் ஐனாதிபதியூடாக தீரத்து வைக்க வடக்கு மாகாண புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளருமான சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
எமது வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக வந்திருக்கின்ற திருமதி சாள்ஸ் அம்மையாருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு எங்கள் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கோருகின்றோம்.

குறிப்பாக வடக்கு ஆளுநர் தன்னுடைய கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வின் போது தான் ஆளுநர் நியமனத்திற்கான பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட போது ஐனாதிபதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதாவது வடக்கு மாகாண மக்கள் வேதனைகள்இ நெருக்கடிகள்இ மனக் காயங்களுடன் வாழ்கின்றதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்தி போக்குவதற்கு முழுமையாக பணியாற்றுமாறும் அதற்கு தான் பூரண ஆதரவை வழங்குமாறும் ஐனாதிபதி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் ஐனாதிபதி அவ்வாறு தெரிவித்திருந்தால் அந்தக் கருத்தக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதுடன் வடக்கு மாகாண மக்களும் ஆறுதல் அடைவார்கள். இவ்வாறான நிலைமையில் வடக்கின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எமது மக்களின் மனக்காயங்களை ஆற்றுப்படுத்த புதிய ஆளுநரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

அதாவது நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடத்தில் குடியேற அவர்களது காணிகளை பெற்றுக் கொடுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நீதியை பெற்றுக் கொடுங்கள்இ  அரசியல் கைதிகள் காலவரையறையின்றி சிறையில் இருந்து மரணிக்கின்ற நிலையில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு இல்லாவிட்டால் குறுகிய கால புனர்வாழ்வு கொடுத்து விடுதலை செய்ய உதவுங்கள்இ 

இங்கு கட்டடங்கள் வீடுகள் அமைக்க தேவையான மணலினை சட்டரீதியாக விரைந்து பெற பிரதேச செயலகங்கள் மூலம் அனுமதிப் பத்திரங்களை நடைமுறைப்படுத்துங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கடற்;தொழிலாளர்களுக்கு மானியங்களை பெற்றுக் கொடுங்கள் கடந்த ஆட்சியில் வீட்டுத்திட்டங்களை பெற்று கடனாளிகளாக அலையும் பயனாளிகளுக்கு மிகுதிப் பணத்தை பெற்றுக் கொடுங்கள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி அலையும் இளைஞர் யுவதிகளுக்கு மாகாண திணைக்களங்களில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுங்கள இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வடக்கில் பௌத்த சாசன அமைச்சால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை தடுத்து நிறுத்துங்கள்  இறுதிப் போரில் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளின் சிட்டையுடன் அலைகின் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள்.

இதே போல எமது மக்களுக்கு இருக்கின்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஐனாதிபதி குறிப்பிட்டுள்ளது போன்று உரிய நடவடிக்கைகளை நீங்கள் விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்று கோருகின்றோம். மேலும் இவை தொடர்பில் உங்களால் இயன்றவரை
பணிபுரிவீர்கள் என வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற நிலைமையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வையுங்கள் என்று மீண்டும் கோரி நிற்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post