இனப்படுகொலை பற்றிய பிரேரணையை ஏகோபித்து மாகாண சபையில் நிறைவேற்றியது தான் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் திருப்பதியளித்த பிரதான விடயமென முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வர் பணியில் உங்களுக்கு திருப்தியளித்த விடயம் ஒன்றை பகிர முடியுமா? எனக் கெட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்த மேலும் தெரிவித்தாவது..
மாகாண சபையில் திருப்தியளித்த விடயங்களில் பிரதானமான ஒன்றாக இனப்படுகொலை பற்றிய பிரேரணையை ஏகோபித்து மாகாணசபையில் நிறைவேற்றியமையைக் கூறலாம். ஆதற்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் உற்ற துணையாக இருந்தார் என்பதையும் நான் இங்கு பதிய வேண்டும்.
இதே வேளை அரசியல் விரக்தி ஒன்றைச் சந்தித்தீர்கள். தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட மாற்றிய சம்பவம் எது? ஏன்ற கேள்விக்கும் பதலளித்துள்ளார்.
அதாவது அரசியல் விரக்தி என்று நீங்கள் கூறுவது எனக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று நினைக்கின்றேன். அது முறியடிக்கப்பட்டதும் இறைவனும் என் மாகாண மக்களும் என்னைத் தொடர்ந்து அரசியலில் இருக்க எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
அவன் விட்ட வழியில் பிரயாணம் செய்கின்றேன். நீங்கள் எதிர்பார்க்கும் 'சம்பவம்' என்பது பல்லாயிரக் கணக்கில் எனதருமை மக்கள் என் சார்பாக வீதியில் இறங்கியமையைக் கூறலாம் என்றார்.
Post a Comment