மலேசியாவிலும் நான்கு பேருக்கு உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் - Yarl Voice மலேசியாவிலும் நான்கு பேருக்கு உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் - Yarl Voice

மலேசியாவிலும் நான்கு பேருக்கு உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கம்

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மலேசியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 26 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையேஇ சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் பகுதிகளில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது என மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மேலும்இ நாட்டின் அனைத்து குடிநுழைவு மையங்களிலும் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

நாட்டுக்குள் தரை வழியாகவும்இ விமானங்கள் மூலமாகவும் நுழையும் அனைத்துப் பயணிகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பயணிகள் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அனைத்து நுழைவு மையங்களிலும் உடல் வெப்பத்தை அளவிடும் மருத்துவக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

மலேசியாஇ சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள மலேசிய மாநிலமான ஜொகூர் பாருவில் 6 குடிநுழைவு மையங்கள் உள்ளன. இவற்றுள் இரு மையங்கள் தரைவழியாக சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்காகச் செயல்படுகிறது. இவ்விரு மையங்கள் மூலம் தினமும் சராசரியாக 3500 சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகின்றனர். இதையடுத்து இந்த மையங்களில் சீனப் பயணிகளுக்காக சிறப்பு குடிநுழைவு வரிசை திறக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post