அலங்காநல்லூர் ஐல்லிக்கட்டு கடந்த முறை தம்பி - இந்த முறை அண்ணண் வெற்றி - Yarl Voice அலங்காநல்லூர் ஐல்லிக்கட்டு கடந்த முறை தம்பி - இந்த முறை அண்ணண் வெற்றி - Yarl Voice

அலங்காநல்லூர் ஐல்லிக்கட்டு கடந்த முறை தம்பி - இந்த முறை அண்ணண் வெற்றி

மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.

காணும் பொங்கல் தினமான இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சுமார் 739 காளைகள் பங்கேற்றன.

இதில்இ 16 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. 14 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாம் இடமும் 13 காளைகளை அடக்கிய கணேசன் 3-ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post