மாற்று அணிக்கு என்ன நடந்தது? உடையுமா ஒட்டுமா? எப்போது வரும் அறிவிப்பு? - Yarl Voice மாற்று அணிக்கு என்ன நடந்தது? உடையுமா ஒட்டுமா? எப்போது வரும் அறிவிப்பு? - Yarl Voice

மாற்று அணிக்கு என்ன நடந்தது? உடையுமா ஒட்டுமா? எப்போது வரும் அறிவிப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பல கட்சிகள் பொது அமைப்புக்களை இணைத்து புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் அறிவிப்புக்களும் தைப்பொங்களுக்கு வெளியிடப்படுமென்று கூறப்பட்ட போதும் அந்த அணி குறித்தான எந்தவித அறிவிப்புக்களும் இல்லாமல் மிக அமைதி காக்கப்பட்டு வருகிறது.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் பலவும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினெஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதே நேரத்தில் இந்தக் கூட்டுக்குள்ளும் சில கட்சிகள் சேராததால் அங்கும் தொடர்ந்தும் இழுபறிகள் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் மாற்று அணி குறித்தான அறிவிப்பு என்பது கடந்த வருட இறுதியில் அல்லது தைப் பொங்கலுக்கு முன்னதாக வெளியிடப்படுமென்று அந்த அணியைச் சேர்ந்த தரப்பினர்களால் அறிவிக்கப்பட்டும் இருந்தது. ஆனாலும் பல நாட்கள் கடந்தும் அவ்வறான எந்தவித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.

மாற்று அணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் இந்த விடயத்தில் மிக அமைதி காத்து வருகின்றனர். ஆகையினால் அந்த அணி குறித்தான அறிவிப்புக்கள் எப்போது வருமென்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆக மொத்தத்தில் மாற்று அணி வருமா வராதா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மையில் மாற்று அணியில் எந்தக் கட்சிகள் எந்த அமைப்புக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன அல்லது இணைந்து கொண்டுள்ளன அதன் நோக்கம் இலக்கு என்ன என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களை எப்பொது வெளியிடுவார்கள் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post