வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் - நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் வாக்குறுதி - Yarl Voice வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் - நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் வாக்குறுதி - Yarl Voice

வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் - நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் வாக்குறுதி

வலிகாமம் கல்வி பணிப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இடமாற்றங்கள் மூலம் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கை அசிரியர் சங்கத்தினால் இன்று புதன்கிழமை நல்லூர் செம்மணிவீதியிலுள்ள வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது  வலிகாமம் கல்வி வலயத்தில் நடைபெற்ற இடமாற்றங்கள் குறித்த பட்டயலின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு முறையற்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை குறித்தும், அதனால் பாதிப்படைந்துள்ளவர்கள் தொடர்பாகவும், வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து மீளவும் இடமாற்றச்சபை கூடி மேலதிக ஆசிரியர் ஆளணி, சுயவிருப்பு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்களுடன் அனைத்து இடமாற்றங்களையும் மீளாய்வு செய்யப்படும் எனவும், அதுவரை இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்திவைக்க நடவடிக்கை எடு;ப்பதாகவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.

இதனைத்;தொடர்ந்து  வடமாகாண கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே  வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இருந்தபோது எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இலங்கை அசிரியர் சங்கத்தால் அவரிடம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது அவற்றுக்குரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post