மாற்று அணி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக மக்களின் நலன்களுக்கே வலுச் சேர்க்கும் - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice மாற்று அணி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக மக்களின் நலன்களுக்கே வலுச் சேர்க்கும் - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice

மாற்று அணி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக மக்களின் நலன்களுக்கே வலுச் சேர்க்கும் - சுரேஸ்பிரேமச்சந்திரன்


மாற்று அணி உருவாக்கம் தமிழ் மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. ஊண்மையில் தமிழ் மக்களின் நலன்களுக்கே வலுச்சேர்க்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக இரண்டு தரப்பாக பிரிந்து இருக்கின்ற பொழுது ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில பேர் சொன்னாலும் கூட ஆனால் நான் சொல்கின்றேன் ஒரு தேர்தலுக்குப் பிற்பாடு ஒத்துவருவார்களாக இருந்தால் அதாவது அந்த இரண்டு தரப்புமே ஒரு சரியான வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சரியான கொள்கையின் அடிப்படையில் அவர்கள் இணைந்தும் செயற்பட முடியும். ஆகவே இணைந்து செயற்பட முடியாது என்பதும் அல்ல.

ஏனெனில் வெறுமnனே ஒரு பக்கத்தில் முழுமையாக எல்லாம் அவர்களுடைய பிடிமாணத்தில் இருக்கிற பொழுது அவர்கள் யாருடைய சொல்லையும் கேட்பதற்குத் தயாராக இல்லை.

ஆனால் இன்னுமொரு பகுதி இருக்கிற பொழுது அவர்களுக்கு நிச்சயமாக ஒரு தேவை ஏற்படலாம் அல்லது இந்த இரண்டு பேரும் இணைந்து போவதற்கான சாத்தியப்பாடுகளும் நிச்சயமாக இருக்கிறது. அப்படியான சூழல் ஏற்படுவது ஒரு ஆரோக்கியமான சூழலொன்றாகவே தான் நானும் கருதுகின்றேன்.

ஆகவே அந்த இரண்டு தரப்பும் தேர்தலுக்குப் பிற்பாடு ஒரு கொள்கை வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இணைந்து செயற்பட முடியுமென்று தான் நான் கருதுகின்றேன். ஆகையினால் அவர்கள் இணைந்து செயற்பட முடியாது என்பதல்ல. ஆகவே ஒரு ஐக்கியத்தை நாங்கள் குழப்பிவிடுவோமென்று அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நாங்கள் கூறுகின்ற இந்த பரந்து பட்ட ஐக்கிய முன்னணிக்குள் கூட்டமைப்பில் இருகக்கக் கூடிய சரியான ஆட்கள் வந்து இணைய வேண்டுமாக இருந்தால் அவர்களும் வந்து இணைந்து கொள்ளலாம். இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் யாரும் இணை;ந்து கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் கிடையாது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post