எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகவும் அவர்களுக்கான நன்னடத்தை கோட்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்காக கற்ற ஆளுமையுள்ள பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களை தெரிவு செய்வதற்காக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment