ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் சர்வதேச உதவியுடன் மாற்று நடவடிக்கை எடுப்போம் - கூட்டமைப்பு எம்பி சித்தார்த்தன் - Yarl Voice ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் சர்வதேச உதவியுடன் மாற்று நடவடிக்கை எடுப்போம் - கூட்டமைப்பு எம்பி சித்தார்த்தன் - Yarl Voice

ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் சர்வதேச உதவியுடன் மாற்று நடவடிக்கை எடுப்போம் - கூட்டமைப்பு எம்பி சித்தார்த்தன்


ஜெனிவாத் தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்து குப்பைத் தொட்டியில் போடுமயின் சர்வதேச உதவியுடன் அரசை நிர்ப்பந்தித்து எமக்கான நீதியையும் தீர்வையும்; பெற்றுக் கொள்வதற்கான மாற்று நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ளுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தள்ளார்.

nஐனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனைக் குப்பைத் தொட்டியில் போடப் போவதாகவும் அரசாங்கம் கூறுகின்ற விடயங்கள் குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

சர்வதேச உதவியுடன் இலங்கை அரசின் இணை அனுசரணையில் தான் nஐனிவாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற தரப்பினர்கள் அதனை எதிர்ப்பது மட்டுமல்லாமல் குப்பைத் தொட்டியில் போடப் போவதாகவும் கூறுகின்றனர்.

அரசாங்கமாக அவர்கள் அத்தகைய நிலைப்பாடுகளை அல்லது நடவடிக்கைகளை எடுத்தால் நாங்களும் அதற்கு மாற்று நடவடிக்கைகளை சர்வதேசத்துடன் இணைந்து நிச்சயம் மேற்கொள்ளுவோம். அதாவது அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க கூடிய தீர்மானத்தை தீர்மானமொன்றை nஐனிவாவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். 

கடந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அரசாங்கமே ஆதரித்திருந்த நிலையில் இப்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் அதற்கு மாற்றான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றது. ஆகையினால் அதற்கு மாற்றான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைமையில் புலம்பெயர் தமிழ் மக்கள், சர்வதேச உதவியுடன் எடுப்பதற்குரிய வேலைகளைச் செய்வோம்.

இதேவேளை இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதே போன்றே கடந்த அரசாங்கமும் தீர்விற்கான முயற்சிகளை எடுத்த போது கூட தீர்வு வருமென்று நான் நம்பவில்லை என்பதையும் கூறியிருந்தேன். 

ஆயினும் தீர்விற்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போது அதனை நாங்கள் குழப்பியதாக இருக்கக் கூடாது என்பதால் அந்தப் பணிகளிலும் நாங்களும் இணைந்து ஈடுபட்டிருந்தோம். அதே போல இந்த அரசாங்கமும் தீர்விற்கான முயற்சிகளை எடுத்தால் அதற்கான ஆதரவைக் கொடுத்துச் செயற்படத் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post