கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் கொரோனா தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பில்; மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நாம் மேற்கொண்டு அதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்த வேண்டாம்.
இன்று சிலர் வெளியில் பயணங்கள் செய்வதில்லை. வெளிநாட்டவர் மாகாணங்களுக்கு பயணித்தால் பேருந்திலிருந்து இறங்கி செல்கின்றனர்.
அதிவேக பாதையிலும் இறங்கி செல்கின்றனர்.
எனவே இது குறித்து தேவையற்ற பிரச்சாரங்கள் மற்றும் தேவையற்ற அச்சங்களை விடுப்பதை தவிர்க்ககுமாறு நாம் கோருகின்றோம்.
போலி பிரசாரங்களின் ஊடாக நாட்டின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுமென இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment