சேலம் ஆத்தூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் திரைப்படங்களில் இல்லை.
இன்றைக்கு உள்ள நடிகர்களின் திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடும். ஏதேதோ தலைப்புகளில் தற்போது திரைப்படங்கள் வருகின்றன. ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை. எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற பாடல் வரிகளை மேற்கோள்காட்டி பேசினார்
அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுவில் உள்ளனர். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வர முடியும்.
ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவிற்கு இனி எந்தப் பதவியும் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment