சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இன்று பொது மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி தொடங்கி வைத்தார்.பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது.
பொது மக்கள் காலையிலேயே வர வேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள். பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்
.'தர்பார்' படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான். இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இது நல்ல கருத்து. இதற்கு மேல் இதை பற்றி கூற விரும்பவில்லை. பொது மக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான். 'தர்பார்' படத்தையும் பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.
அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment