இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்டர்போலின் முன்னாள் தலைவர் Meng Hongweiக்கு 13 வருடங்களும் ஆறு மாதங்களுக்கும் சிறைத்தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 290000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக Meng Hongwei நியமிக்கப்பட்டதுடன் பிரான்ஸில் இருந்து சீனாவுக்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment