எமது மக்களின் பிரச்சனைகள் தேவைகளை நன்கு அறிந்து கொண்ட ஒருவராக இருக்கின்ற சாள்ஸ் வடக்கு மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்கின்ற அதே நேரத்தில் எமது மக்களிற்காக நாம் அவருடன் இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் கூறிக் கொள்கிறோம். இவ்வாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண புதிய ஆளுநராக நிமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் யாழிலுள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பெறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடக்கின் புதிய ஆளுநராக திருமதி சாள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் நாங்களும் கலந்து கொள்வதையிட்டு கர்வமும் சந்தோசமும் கொள்கிறேன்.
புதிய ஆளுநர் எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை மிக அறிந்தவர். அதுவும் எங்களுடைய வட மாகாணத்திலே ஒரு பெண் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். எங்கள் பகுதிகளில் கடமையாற்றி எங்களது மக்களுடைய பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்தும் வைத்திருக்கின்றார்;. உதாரணத்திற்கு இடம்பெயர்ந்து மக்கள் வருகின்ற போது அவ்வளவு மக்களையும் வன்னிமாவட்டம் குறிப்பாக வவுனியா அவர்களை வரவேற்றது.
அப்படியான சூழலில் அதற்கான சகல விடயங்களையும் கவனத்தில் எடுத்து தனது திறமையான செயற்பாட்டால் எங்களுடைய மக்கள் பசி இல்லாத தாகம் இல்லாது தங்களுடைய வருகையை அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போது பிரதேச செயலளாளராக கடமையாற்றினார். அதே போல அரச அதிபராக கடமையாற்றும் போதும். ஏங்களுடைய மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து செயற்பட்டிருந்தார்;.
ஆவ்வாறு எதனையும் செய்யக் கூடிய திறமையும் துணிச்சலும் மிக்க பெண்மணி என்பதை குறிப்பிட வேண்டும். எங்களுடைய மாவட்டத்தின் அம்மையார் ஆளுநராக வருவது பெருமையாக இருக்கிறது. ஆகவே அவரை பாராட்டி வரவேற்கின்ற அதே நேரத்தில் உங்களோட நாங்கள் நிச்சயமாக இணைந்து செயற்படுவோம் என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
ஆகவே எங்களுடைய மக்களின் பிரச்சனையில் விசேடமாகக் கவனத்தில் எடுத்த புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஐனாதிபதியிடம் நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அதனூடாக எங்களுடைய மக்களின் பல பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க வேண்டும். அந்த கோரிக்கையும் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு மட்டுமல்ல எங்கள் மக்களுக்கு இருக்கிறது.
இன்றைக்கு எமது மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு எங்களுடைய அம்மையார் வந்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் ஏற்கனவே பல துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டது போன்று தொடர்ந்தும் உங்கள் பணி பல துறைகளிலும் மிக சிறப்பாக அமைய வேண்டும்.
இதற்கு உதாரணமாக சுங்க திணைக்களதில் நீங்கள் இருந்த போது உங்களுக்கு இடமாற்றம் வந்த நிலையில் அத்தனை ஊழியர்களும் அதனை எதிர்தனர். அதன் பின்னர் மீண்டும் அந்தப் பதவி கிடைத்தது இதனுர்டாக இவருடைய சேவைகள் எந்தளவிற்கு இருக்கிறதென்பதை உணர முடியும்.
இந்த வடக்கு மாகாணம் என்பது இடம்பெயர்ந்த அத்தனை பேரும் உள்ள பிரதேசமாக கஸ்ரப்பட்ட மக்களைக் கொண்ட பிரதேசமாக இருக்கிற படியால் விசேட கவனமெடுத்துச் செயற்பட வேண்டும். குறிப்பாக இங்கு தமது கடமைகளைப் பொறுப்பேற்ற அரச அதிபர்கள் உத்தியோகத்தர்கள் எல்லாம் பல விமர்சனங்களை தாண்டி கஸ்ரத்தின் மத்தியில் கடமைகளைச் செய்து வருகிறார்கள். ஆகவே நிச்சயமாக உங்களுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நாங்களும் உங்களோடு பயணிப்போம் என்றும் கூறிக் கொள்கிறோம் என்றார்.
Post a Comment