யாழ்ப்பாணம் அரயாலை பூங்கன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதிய விபத்துக்குள்ளானதிலெயே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளனார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை இன்று காலை கொடிகாமம் பகுதியிலும் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையிலையே இன்று மதியம் இந்த விபத்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
Post a Comment