ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி தனது வார்த்தைகள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் உரையாற்றிய ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனிஇ அமெரிக்காவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவதுஇ
'ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி சமீப காலமாக அந்த மரியாதைக்கு உரியவராக இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறித்து சில மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாஇ பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகளாக செயற்படுகின்றன என விமர்சித்திருக்கிறார். ஈரானின் பொருளாதாரம் சிதைந்துள்ளது. அந்நாட்டு மக்கள் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில் அவர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டுக்கு பிறகுஇ எட்டு வருடங்களில் முதன்முறையாக ஈரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகையை தலைமையேற்று நடத்தினார்.
அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி தொழுகைக்கு பிறகான உரையில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார்.
இதன்போது அவர் கூறுகையில்இ 'டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒரு தீய அரசு. ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை' என கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment