தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியுமான சித்த ஆயுர்வேத வைத்தியர் இரத்தினராஜா யோகானந்தராஜ உயிரிழந்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியான இவர் அண்மையில் எம்.கே.சிவாஐpலிங்கம் மற்றும் என்.சிறிகாந்தாவால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராகவும் சாகச்சேரி அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந் நிலையில் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த தமது கட்சி உறுப்பினருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment