யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பிள்ளையாரிற்கு ஏற்பட்டிருக்கும் சோதனை? - Yarl Voice யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பிள்ளையாரிற்கு ஏற்பட்டிருக்கும் சோதனை? - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பிள்ளையாரிற்கு ஏற்பட்டிருக்கும் சோதனை?

யாழ்ப்பாண பல்கலைக்க கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விதிகளை மீறி இன ரீதியான முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் மதத் தலங்கள் அமைக்கப்பட்டு வருதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அனைத்து மதங்களுக்குமான ஆலயங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய ஆலயங்கள் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனாலும் தற்போது; பாரிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்ற அமைக்கப்பட்டு வருகின்ற போதும் இந்து பிள்ளையார் ஆலயம் ஒரு கூடாரக் கொட்டிலேயே இருக்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

அதாவது பிள்ளையார் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை விடவும் பாரிய அளவில் மதத் தலங்கள் அமைக்கப்பட்டு வருதாவும் அந்தச் செயற்பாடுகள் என்பது பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளை மீறியதாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post