யுhழ் நகரிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடகவியிலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது கூட்டமைப்பு தொடர்பில் விக்கினெஸ்வரன் தெரிவித்த விடயம் குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
முன்னாள் முதலமைச்சர் விக்கினெஸ்வரன் ஒரு நாளைக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவருடைய குழப்பமான அந்தக் கூற்றுக்களுக்கு நான் பதில் சொல்லப் போய் என்னுடைய கூற்றுக்களும் எல்லாம் குழப்பமாக இருக்கப் போகிறது.
ஆகையினால் அவருடைய கூற்றுக்களுக்கு பதில் சொல்வதைத் தவிர்ப்பதே நல்லதென்று நினைக்கிறேன். ஏனெனில் அவருடைய கூற்றுக்கள் விளக்கமாக இல்லை. அவை எல்லாம் ஒரே குழப்பமாக உள்ளது.
அப்படியான குழப்பமான கூற்றுக்களுக்கு நான் பதில் சொன்னால் அது இன்னமும் குழப்பமாகவே இருக்கும். ஆகையினால் அவருக்கு தெளிவு ஏற்பட்டுவிட வெண்டுமென பிராத்தித்துவிட்டு விடுவதே நல்லது என்றார் சுமந்திரன்
Post a Comment