தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வீ.விக்கினேஸ்வரன் இனவாதம் பேசி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழ்க் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்காது தனக்கு வீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.
வடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்.கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை இன்று பிற்பகலில் பார்வையிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச..
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுதருவதாக ஆட்சிப்பீடம் ஏறிய முன்னைய அரசு சம்பந்தனுக்கு வீட்டையே பெற்றுக்கொடுத்தது. தமிழ் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்து கொடுக்கப்படவில்லை.
நான் நாடாளுமன்றம் சென்று 20 வருடங்கள் ஆகின்றது.சம்பந்தன் அன்று கூறியதையே இன்றும் கூறுகின்றார்.விக்கினேஸ்வரன் நீதியரசராக இருக்கும்போது ஒருமாதிரியாகவும் முதலமைச்சர் ஆனபிறகு இன்னொரு மாதிரியாகவும் இருக்கிறார்.அவர் இனவாதத்தை தூண்டுவதைத் தவிரவேறொன்னும் செய்யவில்லை என்றார்.
Post a Comment