பங்காளிகளுக்கு இடையிலான ஆசனப்பங்கீடு முரண்பாடுகளில் இணக்கம் ஒருமித்து செய்படவும் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் பங்காளிகளுக்கிடையே பெரும் குழப்ஙகள் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டங்கள் இரண்டு தடவைகள் நடைபெற்றிருந்தன.
ஆயினும் இக் கூட்டங்களில் இறுதி முடிவுகளோ அல்லது இணக்கப்பாடுகளோ ஏற்படுத்தப்படாத நிலையில் இன்று மீண்டும் கூட்டம் நடைபெற்றது.
இதன் போதே யாழ்ப்பாணம் இ வன்னிஇ மட்டக்களப்புஇ திருகோணமலை என தேர்தல் தொகுதி ரீதியாக ஆசனங்கள் பங்கீடு செய்யப்பட்டு இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பங்கீடுகளின் அடிப்படையில் பங்காளிக்கிடையிலான முரண்பாடுகளும் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment