தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யிடம் அதை எதிர்பார்க்கவில்லை என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரை சின்னத்திரை என தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் இவர் விரைவில் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ராதிக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: 'இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன். வந்து நடி பாடு என நான் அவரை மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகரா இவ்வளவு பெரிய மனிதரா வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இனறு அவரது வளர்ச்சியையும்இ புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு தானும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித் பற்றி பேசிய அவர் பவித்ரா என்ற படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்தேன். அஜித் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும். மேலும்இ அஜித்தை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என நானே பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன்' என ராதிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Post a Comment