மாத்தறையில் வயிற்று வலி என்று கூறி சென்றவர் ஆண் குழந்தை பிரசவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வயிற்று வலியென்று சென்றவர் தன்னை ஆண் என்றும் அவர் அடையாளப்படுத்தியே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் பெண் என அடையாளம் கண்டுகொண்ட மருத்துவர்கள் அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பியதாகவும் இதன்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று காலை தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து மருத்துவர்களால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர்.
இதனையடுத்து ஆண்குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது.
26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாட்களாக இவர் அப்பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கையில்
குறித்த நபர் இயற்பிறவியில் பெண்ணாக காணப்பட்டாலும் அவர் ஆண் சுபாபம் கொண்டே இதுவரை காலம் வாழ்ந்து வந்துள்ளார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடர்பில் மருத்துவர்களால் ஆராயப்பட்டுவருகின்றது.
இந்த தகவலானது பரவியதும் அவரை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் மாத்தறை மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
மேலும் அவர் தன்னுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆணின் பெயரிலேயே பெற்றுக்கொண்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றி வந்த இவர் குழந்தை ஒன்றினை பிரசவித்த பின்னரே பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Post a Comment