யால் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தமானது கடந்த 2004ஆம் ஆண்டு உடன்படிக்கை இருக்க வேண்டும் இனி நம் தமிழ் தலைமைகள் என்று கூறிக்கொண்டு திரியும் சம்பந்தன் மாவை ஒரு செய்த தவறுகள் காரணமாகவே 2009 வரை நீடித்து பேரழிவு ஏற்பட்டது இதற்கு முழுப் பொறுப்பும் சம்பந்தன் மாவை
ஆரம்ப காலத்தில் இணைந்து செய்யப்பட்ட ஜிடி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வா காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக நீக்கி பொன்னம்பலம் தந்தை செல்வா பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது பின்னர் 20 வருடங்களுக்கு பின்னர் தந்தை செல்வா மட்டும் நீதி பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து தமிழ் மக்கள் நலனுக்காக பலமான கூட்டணி ஒன்றை அமைத்தனர்.
தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் என கூறிக்கொண்டு திரியும் மாவை சேனாதிராஜா அமிர்தலிங்கத்தின் இடத்திற்கு தான் வரவேண்டும் என முண்டியடித்துக் கொண்டிருந்த அவ்வாறு அவர் செயற்பட்டது மாபெரும் தவறு
வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் அரசியலில் இருந்து முழுமையாக வழங்க வேண்டும் தற்போது தலைவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது அவரவர் தமக்கு ஏற்ற வகையில் கருத்துக்களைக் கூறிக் கொண்டு திரிகின்றனர் அவ்வாறு தமிழ் மக்களையே பாதிக்கச் செய்கின்றன
அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.
தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது இ எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம்.
சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்துஇ முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.
ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதே பின்னர் நடந்தது என்பது வரலாறு.
மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்.
மகேஸ்வரன் இ ரவிராஜ் இ லக்ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்கஇ மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.
சம்பந்தன் இ மாவை இ சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.
காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன்.
புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ?
கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள். மஹிந்த என்னிடம் கோரினார் சமஸ்டி என பேச வேண்டாம் 'இந்திய மொடல்' என கேளுங்கள் என்றார். என்னுடைய 'இந்திய மொடல்' எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்லார்.
20 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர் தமிழ் மக்களின் நலனுக்காக மீண்டும் இணைய முடியும் ஆனால் தற்போது ஒவ்வொரு திசையில் பிரிந்து உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய முடியாது எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்த தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் ஒரு பலமான அணியை உருவாக்க முன்வாருன்கல்.என்றர்
--
Post a Comment