யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி யாழில் கொலை - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி யாழில் கொலை - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி யாழில் கொலை

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.

29 வயதுடைய  ரோஷனி காஞ்சனா எனும் மாணவியே  கெலைசெய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடய மதுரமேஜ் திலீப் குமாரா என்பவரே மாணவியை கொலை செய்துள்ளார்.

இருவரும் காலி மாவட்டம் அம்பலாங்கொடை வேருவலயை சொந்த இடமாக கொண்டவர்கள் என்பது குறிப்ப்பிடத்தக்து.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும்இ குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில்  இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியை கொலை செய்து விட்டுஇ கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபரை பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post