கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்த முறையில் தமிழ்த் தேசம் மிளிர வேண்டும் - கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து மணிவண்ணண் - Yarl Voice கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்த முறையில் தமிழ்த் தேசம் மிளிர வேண்டும் - கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து மணிவண்ணண் - Yarl Voice

கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்த முறையில் தமிழ்த் தேசம் மிளிர வேண்டும் - கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து மணிவண்ணண்

கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்த முறையில் தமிழ்த் தேசம் மிளிர வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஊடாக வலிகிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மணிவண்ணண் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் பெரும் சொத்தாகக் கருதப்படும்  கல்வியை அழித்து ஒழிப்பதன் மூலம்  தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விடலாமென செயற்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கம்தான் தமிழர்களின் உயர் கல்வி வாய்ப்பை பறித்த தரப்படுத்தல் முறையாகும்.

இலங்கையில் 30ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ள எமது சமூகம்  கல்வியிலே பின்தங்கி செல்லுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்வியே எமது மூலதனம் என செயற்பட்டுவரும் எமது அரசியல் இயக்கம் வறுமையில் கல்வியை தொடர முடியாத நிலையில் எவரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக எமது கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்களை தமிழர் தாயகம் எங்கும்    செய்துவருகிறது.

எமது எதிர்கால சந்ததி சிறந்து விளங்குவதற்கு எமது சிறார்கள் கல்வியிலே சிறப்பான நிலையை அடைய வேண்டும். அதற்கு எமது பெற்றோர் தமது பிள்ளைகள் கல்வியிலே சிறப்பாக செயற்பட ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்.

தற்போது எமது தாயகத்திலே நடந்தேறுகின்ற போதைப் பொருள் கலாச்சாரம் வாள் வெட்டு கலாச்சாரம் என்பவற்றிலிருந்து எமது தேசம் விடுபட்டு கல்வியில் சிறந்த பண்பட்ட தேசமாக மிளிர வேண்டும். அதற்கு எமது அரசியல் இயக்கம் தனது சக்திக்கும் அப்பாற்பட்டு செயற்படும் என்றார். இந் நிகழ்வில் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சீறிகுமரன் உட்பட கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post