கடந்த சில வருடங்களாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் உள்ளக வளாகத்தில் இப் பாடசாலை தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்திய அரசின் நிதி உதவியில் கடந்த 2017.07.19 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது அதன் பணிகள் நிறைவடைந்து இன்று (15) உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
இன்றய நிகழ்வில் முதல் அம்சமாக கதீஜா மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களால் பாண்ட் (டீயனெ) வாத்தியம் மூலம் கௌரவமாக நடை பவணியாக ஒஸ்மானியா முன்றலில் இருந்து கதீஜா மகாவித்தியாலயம் வரை அழைத்துவரப்பட்டனர் .
பாடசாலை முன்றலில் மொளலவி ஏ.எம்.ஏ அஸீஸ் மற்றும் மௌலவி முஜாஹித் ஆகியோரால் இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டு பின்னர் அதிபரால் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு அதிபரின் தலைமையுரையுடன் கூடிய வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விசேட உரைகளாக யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி பிரதி அதிபரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. நிகழ்வுகளை கல்லூரி ஆசிரியை திருமதி சுபத்திரா திருசாந்த் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment