திமு.க. காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு கே.ஆர்.ராமசாமி ஆகியோர் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்றுஇ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ 'திமு.க.இ காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
'கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கே.எஸ்.அழகிரி என்னிடம் பேசியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா? என குள்ள நரி சக்திகள் ஏங்கித் தவிக்கின்றன.
எனவே கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்துஇ விரும்பத்தகாத விவாதங்கள் நடத்தக்கூடாது' என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Post a Comment