இடத்தையும் திகதியையும் அரசாங்கம் அறிவித்தால் பேசுவதற்கு நாங்கள் தயார் - கூட்டமைப்பு - Yarl Voice இடத்தையும் திகதியையும் அரசாங்கம் அறிவித்தால் பேசுவதற்கு நாங்கள் தயார் - கூட்டமைப்பு - Yarl Voice

இடத்தையும் திகதியையும் அரசாங்கம் அறிவித்தால் பேசுவதற்கு நாங்கள் தயார் - கூட்டமைப்பு

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியடைவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏசுமந்திரன் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐனாதிபதி கூயியருக்கின்ற நிலையில் அதற்கு நாங்களும் இணங்கி செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி குறித்து கேட்ட பொதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

புதிய அரசியமைப்பு முயற்சி இன்னமும் தோல்வியடைந்ததாக நாங்கள் கருதவில்லை. ஏனெ;னறால் ஐனவரி 3 ஆம் திகதி ஐனாதிபதி தன்னுடைய உரையில் இந்த நாட்டிற்கு ஒரு புதிய அரசமைப்பு தேவை என்று அவரே சொல்லியிருக்கிறார். அதில் புதிய அரசமைப்பிற்கு நான்கு விடயங்கள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியிரக்கின்றார்.

ஆதில் ஒன்று நிறைவேற்றதிகார ஐனாதிபதி முறை, இரண்டாவது மாகாண சபைகள். மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் முறை, நான்காவது நீதிமன்ற நீதித்துறைச் சுயாதீனம். ஆக நீதித்துறைச் சுயாதீனத்திற்காக புதிய அரசமைப்பு தேவையில்லை. ஆனால் மற்றைய மூன்று விடயங்களும் தான் நாங்கள் ஏற்கனவே கடந்த நான்கரை வருசங்களாகச் செயற்த அரசமைப்பு பேரவையிலே நாங்களும் அடையாளப்படுத்திய மூன்று விடயங்களாக இருக்கின்றன.

அது சம்மந்தமாகத் தான் இவரும் புதிய அரசமைப்புத் தேவை என்று சொல்லுகின்றார். ஆனபடியினால் தான் அவருடைய உரi சம்மந்தமாக எங்களுடைய பதிலில் அவரும் அரசமைப்பு தேவை என்று சொல்லியிரக்கின்றார். அவர் சுட்டிக்காட்டியிரக்கிற விடயங்கள் சம்மந்தமாகத் தான் அரசமைப்பு பேரவையும் இதுவரைக்கும் அவர்களுடைய கட்சிக்காரர்களுடைய இணக்கத்துடன் பல விடயங்களை நாங்கள் முடிவிற்கு கொண்டு வந்த ஒரு வரைபும் கொண்டு வரப்பட்டது. அந்த அரசமைப்பு பேரவை இன்னமும் இருக்கிறது. அகவே அதனை நாங்கள் முன்னெடுப்பதற்குத் தயார் என்று சொல்லியிரக்கிறென்.

ஐனாதிபதியினுடைய மற்றைய கூற்றுக்களில் பேரினவாதத்தை முக்கியத்துவப்படுத்தி பெரினவாதப் பேச்சாக அவர் அதனைப் பேசியிரந்தார். அதற்கு நாங்கள் மறுப்புத் தெரிவித்திரந்தோம். அப்படியான நிலைப்பாட்டிற்கு நாங்கள் நாட்டைக் கொண்டு செல்வதற்கு ஒரு போதும் இணங்க மாட்டோம் என்று அவரின் அந்தக் கொள்கைப் போக்கை நான் கண்டித்து பேசியிருந்தேன். ஆயினும் புதிய அரசமைப்பை கோட்டா கொண்டு வருவதற்கு நாங்களும் ஆதரவைத் தெரிவித்திருந்தோம்.

மேலும் ஐனாதிபதியுடன் நாங்கள் பேச வேண்டுமென்று சொன்ன போது அவரும் எங்களுடன் பேச வேண்டுமென்று சொல்லியிரந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை இன்னமும் அவர்கள் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு கூட்டமைப்போடு மட்டுமல்ல எல்லா தரப்போடும் பேச வேண்டுமென்றும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல சொல்லியிருந்தார். ஆக யாரோடும் பேசட்டும் ஆனால் கூட்டமைப்போடு பேசுவதற்கான திகதியையும் இடத்தையும் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளோம். அந்த வகையில் நாங்கள் பேசுவதற்குத் தயாராகவே இருக்கின்றொம் என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post