தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 103ஆவது பிறந்த தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் இந்த பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி பிறந்த தினத்தினை நினைவு கூர்ந்தார்.
அதனை தொடர்ந்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலி -கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா மற்றும் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் இறுதியில் கோப்பாய் சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் இனிப்பு பண்டங்களையும் பரிமாற்றினார்.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்களின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் பிறந்தஇஇறந்த தினங்களை அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment