அரசாங்கம் ரெடி என்றால் நாங்களும் ரெடி தான் - விமல் வீரவன்சவிற்கு சித்தார்த்தன் பதில் - Yarl Voice அரசாங்கம் ரெடி என்றால் நாங்களும் ரெடி தான் - விமல் வீரவன்சவிற்கு சித்தார்த்தன் பதில் - Yarl Voice

அரசாங்கம் ரெடி என்றால் நாங்களும் ரெடி தான் - விமல் வீரவன்சவிற்கு சித்தார்த்தன் பதில்


தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழர் தரப்புடன் அரசாங்கம் பேசுவதற்குத் தயார் என்றால் அரசுடன் பேசுவதற்கு நாங்களும் தயாராகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்திற்குப் பதிலளிக்கையலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் புதிய ஐனாதிபதி பதவியேற்ற பின்னராக புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்சவிடம் கட்சியின் தலைவர் சம்மந்தர் அண்ணர் கேட்டிருந்தார்.

அதற்கு ஐனாதிபதியும் பேச தான் வேண்டும் பேசுவோம் என்றும் பதிலளித்திருந்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் பின்னர் ஐனாதிபதி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் இந்த அரசின் அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுமென்று அறிவித்திருக்கின்றார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை எப்போது எங்கே என்பது தொடர்பில் அறிவிக்கவில்லை.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் தமிழ் தரப்புடன் பேச வேண்டுமென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்புடன் நிச்சயம் பேச வேண்டும்.

அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முன்னைய அரசில் அமைச்சராக விஐயகலா மகேஸ்வரன் மற்றும் இந்த அரசில் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இருக்கின்றனர். ஆகையினால் இவர்களுடன் பேசுவதென்றால் அவர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே பேசலாம்.

இதனைவிடுத்து தமிழர் தரப்பிலுள்ள எல்லோருடனும் பேச வேண்டுமென்று எந்த அடிப்படையில் சொல்கின்றரோ தெரியவில்லை. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் பேச வேண்டுமாயின் எங்களுடன் பேசலாம் நாங்களும் அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கின்றோம்.

இதனைவிடுத்து பேசுவோம் பேசத் தயார் என்று அரச தரப்பினர் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆகவே பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டுமென்று தான் கோருகின்றோம். அதே நேரத்தில் பேசுவதாகச் சொல்கி ;கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முயலக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post