தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் யார்? - Yarl Voice தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் யார்? - Yarl Voice

தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் யார்?

தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் குறித்த அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க தலைவரை நியமிப்பத்தில் இழுப்பறி நிலை நீடிக்கின்றது.  இந்நிலையில் இன்றைய தினம் டெல்லியில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன்போது பா.ஜ.கவின் செயல் தலைவராக இருந்த ஜே.பி நட்டா தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பா.ஜ.கவின் புதுச்சேரி தலைவராக சாமிநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்தவரிசையில் நாளைய தினம் தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக செயற்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post