டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்குமாறு வடக்கு மாகாண கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்து
பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாகும் நிலையில் சுற்றுப் பெறச் சூழலுல் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதனை உறுதி செய்யுமாறு பாடசாலை நிர்வாகங்களுற்கு அறிவுறெத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சு வழங்கியுள்ள குறித்த அறிவுறுத்தலில் தற்போது யாழில் டெங்கு தாக்கம் குறைவடையாத நிலமையில் பாடசாலைகள் ஒரு மாதகால விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை விடுமுறைக் காலத்தில் பாடசாலைகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற சூழல் கானப்படக் கூடும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
எனவே சகல பாடசாலைகளுலும் உள்ள சுற்றுச் சூழலை பாடசாலை ஆரம்பத்தின்போதே துப்பரவு செய்வதன் மூலம் மாணவர்களை பாதுகாக்க முடியும் இதன் காரணமாக குறித்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
Post a Comment