நியுசிலாந்தின் கடின இலக்கை எளிதாக விரட்டிய இந்தியா - Yarl Voice நியுசிலாந்தின் கடின இலக்கை எளிதாக விரட்டிய இந்தியா - Yarl Voice

நியுசிலாந்தின் கடின இலக்கை எளிதாக விரட்டிய இந்தியா

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இன்று (வெள்ளிக்கிழமை) இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிஇ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில்இ மார்டின் கப்டில் 30 ஓட்டங்களையும் கொலின் முன்ரோ 59 ஓட்டங்களையும்இ கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் டிம் செய்பர்ட் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க மிட்செல் சான்ட்னர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா சர்துல் தாகூர் யுஸ்வேந்திர சஹால் சிவம் டுபே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது இந்தியா அணி சார்பில் ரோஹித் சர்மா 7 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 56 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி 45 ஓட்டங்களுடனும் சிவம் டுபே 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயஸ் ஐயர் 58 ஓட்டங்களுடனும் மணீஷ் பான்டே 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சில் இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் பிளயர் டிக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள்; அடங்களாக ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி நாளை மறுதினம் ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post