ஆயினும் மாற்று அணி என்பது கூட்டமைப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள், புதிய அணிகள் உருவாக்கம் என்பன குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கூட்டமைப்பிற்குள் இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சமூகமாகத் தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகிறோம். தேர்தல் சம்மந்தமாக கூட சுமுகமான தீர்வுகள் ஏற்பட்டுள்ளன. எதிலும் எந்தவித பிரச்சனைம் இருக்கவில்லை.
இதில் முதலாவது விசயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சமூகமாக பேசி இணங்கியிருக்கிறோம். மேலும் எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவாதாகச் சொன்னதும் கிடையாது.
ஆகவே கூட்டமைப்பு ஒழுங்காக எந்தவித குழப்பமும் இல்லாமல் தேர்தலை எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறது. தேர்தலில் இதற்கு முன்னர் மக்களிடத்தே எங்களுக்கு கிடைத்த ஆணையை விட சிறப்பான ஆணையை பெறுவோம் என்ற ரீதியில் நாங்கள் செயற்படுகிறொம்.
மேலும் ஒற்றுமைக்கான அழைப்பொன்றை நாங்கள் விடுத்திருந்தோம். ஆனால் அந்த ஒற்றுமைக்கான அழைப்பை அல்லது ஒற்றுமையை விரும்பாமால் ஏன் நிராகரிக்கப்படுகிதென்றால் அதனை நிராகரிப்பவர்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும். நான் அவர்களிடத்தே விடுத்த அழைப்பிற்கு பிரதானமான காரணம் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றாக பலமாக நிற்க வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியான ஒற்றுமைய இருக்க வேண்டுமென்று தான்.
உண்மையில் ஒற்றுமையொன்று ஏற்பட வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரதானமான இருக்கின்ற கட்சியோடு மற்றவர்கள் சேர்வது தான் சாத்தியமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் அந்தப் பிரதானமான கட்சி. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் அவர்கள் சொல்ல முடியாது.
அதிலே வந்த சேருமாறு நான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் கூட்டமைப்பிற்குள் ஏற்கனவே இருந்தவர்கள். ஆகையினால் அந்தக் கட்சிக்கு அவர்கள் திரும்பி வருவதில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. ஆனால் அவர்கள் வெவவேறு காரணங்களுக்காக பிரிந்து போனவர்கள் அந்தக் காரணங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது ஒவ்வொரு நொண்டிச் சாட்டை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் மாற்று அணி எங்களுக்கு தேவையில்லை. அது வரக் கூடாது. அதுவும் விசேசமாக முன்னால் முதலமைச்சர் தலைமையில் வந்தால் அது படு பாதகமானது. ஆனாலும் அது அவரின் வேலையாக இருக்கலாம். அவர் உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும். ஆனால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள் தான். கூட்டமைப்பிற்கு அது தாக்கத்தைச் செலுத்தாது. ஆனால் மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும்.
மேலும் மாற்று அணி உருவாக்குவதாக இருந்தால் அது தமிழ் மக்களின் ஒற்றுமையை மிக மோசமாக பிளவுபடுத்துகின்ற ஒரு நோக்கு. அந்த மாற்று அணி எதுவாக இருந்தாலும் முற்று முழுதாக கூட்டமைப்பை தோற்கப் பண்ணி அவர்கள் தனியாக ஒருபலமான சக்தியாக வருவார்கள் என்று அவர்கள் கூட எதிர்பார்க்க மாட்டார்கள். ஆகையினாலே ஒரு மாற்று அணியை உருவாக்குகிற செயலை இந்த நேரத்திலே செய்வது தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப்படுகிற மாபெரும் சதி என்றார்.
Post a Comment