விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டி சொலை பிரதேசத்தில் வைத்து இந்த உலர் உணவுப் பொருட்களை கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் வழங்கி வைத்தார்.
கட்சியின் மாவட்ட அமைப்பளார் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் குறித்த பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்ட சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கட்சியின் மட்டக்ளப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொகுதி தலைவர்களும் உள்ளுராட்சி சபை உறுப்பினர் லகிந்தன், கட்சியின் செயற்பாட்டாளர்களான விஸ்னுகாந்த் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மக்களின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்துடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது கருத்து வெளியிட்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண் எதிர்காலத்தில் நல்லதோர் முடிவுகளை எடுக்க வெண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
Post a Comment