கடைசி வரை 'த்ரில்'லாக சென்ற இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அற்புதமான ஆட்டத்தை நம்மால் கேட்க இயலாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 165 ரன்கள் சேர்த்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியாலும் 165 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற்றது
அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டிக்குப்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில்
''கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து நான் சில புதிய விஷயங்கள் கற்றுள்ளேன். அது எதிரணி சிறப்பாக விளையாடும்போது இறுதி கட்டம் வரை பொறுமையாக இருந்து போட்டியை தங்கள் பக்கம் திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
இதைவிட அற்புதமான போட்டிகளை நம்மால் கேட்க முடியாது. இதற்கு முன் நாங்கள் சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அணியின் தன்மையை காட்டுகிறது.
தொடக்கத்தில் கேஎல் ராகுல் உடன் சஞ்சு சாம்சனை சூப்பர் ஓவரில் களம் இறக்க நினைத்தோம். ஆனால் கேஎல் ராகுல் என்னிடம் நீங்கள்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்களுக்கு அனுபவம் அதிகம் என்றார். அதனால்தான் நான் தொடக்க வீரராக களம் இறங்கினேன்.
கேஎல் ராகுலின் முதல் இரண்டு ஷாட்டுகளும் முக்கியமானதாக அமைந்தது. அதன்பின் நீங்கள் இடைவெளி பார்த்து பந்தை தட்டிவிட்டால் அணியை வெற்றி பெற வைத்து விடலாம். டாப் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன் பயமில்லாமல் விளையாடக் கூடியவர். நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. அவர் ஆட்டத்தின் வேகத்தை அப்படியே எடுத்துச் செல்ல முயன்றார். அவரது திறமை மீது அவர் உறுதியாக இருக்க வேண்டும். சைனி மீண்டும் வேகமாக பந்து மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார்'' என்றார்.
Post a Comment