யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது விருந்தினர்கள் மாலை அணிவித்து வருவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான பதக்கங்களை பிரதம விருந்தினர் எம்.ஏ,சுமந்திரன் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சான்றிதழ்வளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோலட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், மதத் தலைவர்கள், கல்லிமான்கள், பொது மக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment