ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற தரப்புக்களை நிராகரித்து கொள்கைகளில் உறுதியாக பயணிக்கின்ற கஜேந்திரகுமார் தரப்பிற்கு வாய்ப்பை வழங்க வேண்டும் - கஜேந்திரன்
ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க வேண்டுமென்பதில் எங்களைத் தவிர ஏனைய அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆகையினால் இந்தத் தரப்புக்களை மக்கள் நிராகரித்து கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான எமது அணிக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளிடத்தே ஒற்றுமை குறித்து வலியுறுத்தப்படுகின்ற நிலைமையில் கட்சிகளுக்கிடையெ ஏற்படுகின்ற பிளவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
இன்றைக்கு தமிழ்த் தரப்பு ஒற்றுமையாகத்தான் இருக்கிறது.
ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க வேண்டுமென்பதில் எல்லோரும் அதாவது கூட்;டமைப்பு ரெலோ, புளொட் ஈபீஆர்எல்எப், விக்கி ஐயாவின்; கூட்டணி என அனைவருமே ஒற்றையாட்சி அடிப்படையிலான இந்த தீர்வை முடக்க வேண்டுமமென்றே இருக்கின்றார்கள்.
அதற்கு சிறந்த எடுத்துக் காட்ட கடந்த ஒக்ரோபர் மாதம் டைபெற்ற கூட்டத்திலெ அந்த ஒற்றையாடசி தொடர்பா அறிக்கையை நிராரிப்பதை மறுத்தது. எங்களைப் பொறுத்தவரையில் அந்த நிலைப்பாடு தமிழர்களைப் பாதுகாக்காது தமிழர்களை அழிக்கும் என்பது எங்கள் கருத்து.
ஆகவே ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகிற நிலைப்பாட்டை நோக்கி இந்த அரசியலை முன்னகர்த்தக்ககூடிய வல்லமையும் தெளிவும் செல்நெறியும் தெளிவாகத் தெரிந்த ஒரேயொருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே இருக்கிறார். அவருடைய தலைமையை பலப்படுத்தவது மட்டும் தான் அனைத்தையும் தாண்டி தமிழர்களுக்கான விடுதலையை முன்னகர்த்துவதற்கான ஒரே வழி.
கடந்த பத்தாண்டுகளில் மற்றத் தரப்புக்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தார்கள். ஆக நாங்கள் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெறாமல் வெளியில் இருந்தோம். இந்தத் தரப்புக்கள் எல்லாம் சேர்ந்த பாரர்ளுமன்றத்தில் ஒற்றையாட்சி இடைக்கால அரசமைப்பை தயாரித்தததைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
ஆகவே இம்முறை இந்தத் தரப்புக்கள் அனைத்தைம் நிராகரித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணிக்கு மக்கள் வாய்ப்பைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment