கொழும்புத்துறை காணி அளவீடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice கொழும்புத்துறை காணி அளவீடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

கொழும்புத்துறை காணி அளவீடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று (22) யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்துரையாடலில் எட்டப்பட்டிருந்த தீர்மானங்கள் தொடர்பில் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் செயலாளர் என்.எம். அப்துல்லாஹ் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்களாவது, 

நேற்று (2020.01.21) கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றில் உள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதற்காகச் சென்ற யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களத்தினர் குறித்த பகுதி பொதுமக்களினதும், அரசியல்; பிரதிநிதிகளினதும் கடுமையான எதிர்ப்பினால் அளவீடுகளை மேற்கொள்ளாது திருப்பியனுப்பப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தோம்.

குறித்த சம்பவத்தின் போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவே குறித்த காணி சுவீவகரிப்பு செய்யப்படுவதாக குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் கருத்து தெரிவித்திருந்ததாக இணையத்தள செய்திகள் வாயிலாக அறிந்திருந்தோம். குறித்த கருத்திற்காக முஸ்லிம் மக்கள் சார்பில் வண்மையான கண்டனங்களை முதலில் பதிவு செய்து கொள்கின்றோம்.

யாழ்ப்பாணம் முஸ்லீம்களோ, முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகளோ எமது சகோரர்களான தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தோ அல்லது சுவீகர்ப்பு செய்தோ எம்மை மீள்குடியேற்றுங்கள் என அரச நிறுவனங்களிடமோ, அரசியல் பிரதிநிதிகளிடமோ,அதிகாரிகளிடமோ எப்பொழுதும் கோரிக்கை விடுத்ததில்லை.

குறிப்பாக மேற்படி கொழும்புத்துறை, நெடுங்குளம் பகுதியில் யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம்களை குடியேற்றுங்கள் என எந்த சந்தர்ப்பத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக எமக்கு உரித்தான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சார்ந்து உரிய சட்ட நியமங்களுக்கு அமைவான எமது நீதியான கோரிக்கைகளையே இதுவரை முஸ்லீம் சமூகம் முன்வைத்து வருகின்றது.

யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வெளியேற்றத்திற்கு முன்பும் சரி, தற்பொழுதும் சரி தமிழ் மக்களுடன் இணைந்து நல்லிணக்கமாக வாழ்வதையே முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் மீள்குடியேற்றம் முழுமையடையாது அன்றாடம் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தை தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பதற்கு ஒரு சிலர் முயற்சித்து வருவதை நாம் அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.

எனவே இவ்வாறு தமிழ் முஸ்லிம் இன நல்லுறவில் விரிசலை உண்டாக்கி தமிழ் போசும் மக்களை பிரித்து கீழ்த்தரமான முறையில் அரசியல் செய்ய முனைவோர்களை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

இவ் விடயத்தில் எமது சகோரர்களான தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இரு இனங்களுக்கிடையிலான உறவுகள் பிளவுபடாது எமது பயணம் தொடர வேண்டும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் கூறி நிற்கின்றோம்.

இறுதியாக மீள்குடியேறிவரும் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உரிய அரச சட்ட முறைமைகளுக்கு அமைவாக பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்தும் எம்மால் முன்னெடுக்கப்படும் என்பதையும், இதற்கு உரிய அரச நிறுவனங்கள், அரச அதிகாரிகள், மாவட்டத்தினுடைய அரசியல் பிரதிநிதிகள் தமது ஒத்துழைப்புக்களை பாதிக்கப்பட்ட எமது சமூகத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக கோரி நிற்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதியில் சபையில் ஏகமனதாக இன்றய கலந்துரையாடலின் தீர்மானங்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்குமாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பிவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 




0/Post a Comment/Comments

Previous Post Next Post