முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுக்கொடுக்கத் தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பனமரத்துப்பட்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
'அ.தி.மு.க.வில் எல்லோரும் முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
அப்படி என்றால் ஏற்கனவே முதலமைச்சராக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?. வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள்.
கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு தேவகவுடா முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?' என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Post a Comment