வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே காணாமல்ப் போயுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமான நிலை காணப்படுகிறது.
பத்து வயதைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் மற்றும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் இன்று (18) மாலை வேளையில் இருந்து காணாமல்ப் போயுள்ளதாக பருத்தித்துறைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது இதனையடுத்து பருத்தித்துறைப் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் மாலை ஆகியும் வீட்டுக்கு செல்லாத்தையடுத்து ஊர் மக்கள்இ இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காத்தை அடுத்து பருத்தித்துறைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிசார் தற்போது நாகர்கோவில்ப் பகுதிக்குச் சென்று மீண்டும் அப் பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.
கலியுகமூர்த்தி மதுசன் 10 வயது
புஸ்பகுமார் செல்வகுமார் 10 வயது
சந்தியோ தனுசன் 17 வயது மனநலம் குன்றியவர்.
யாராவது தகவல் அறிந்தால் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0776954359
வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை
Post a Comment