இந்தியாவிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, எதிரிகளாகவும் பார்க்கவில்லை, எங்களை வெறுமனே பாவிப்பதற்கு இடமளிக்க முடியாது - கஜேந்திரகுமார் - Yarl Voice இந்தியாவிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, எதிரிகளாகவும் பார்க்கவில்லை, எங்களை வெறுமனே பாவிப்பதற்கு இடமளிக்க முடியாது - கஜேந்திரகுமார் - Yarl Voice

இந்தியாவிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, எதிரிகளாகவும் பார்க்கவில்லை, எங்களை வெறுமனே பாவிப்பதற்கு இடமளிக்க முடியாது - கஜேந்திரகுமார்

இந்தியா உட்பட சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அவர்களை எதிரிகளாகவும் பார்க்கவில்லை. அவர்களுக்கு எதிரான கொள்கைகளை நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் எங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே முன்வைக்கிறோம். அதில் விட்டுக் கொடுப்புக்கள் எதனையும் செய்ய முடியாது. ஆகையினால்; எங்களது விடயங்களை வைத்து அவர்கள் எங்களை வெறுமனே பாவிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பூகோள அரசியில் இந்தியா குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்..

நாங்கள் எவருமே இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளையோ நிலைப்பாடுகளையோ முன்வைக்கவில்லை. அந்த விமர்சனம் எங்கள் மீது முன்வைக்கிறதென்பது தமிழ் மக்களை ஒரு பிழையான கோணத்தில் எங்கள் தொடர்பாக ஒரு கருத்தருவாக்கத்தை செய்வதற்காகத் தான்.
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதற்குப் பிற்பாடு தனிப்பட்ட முறையில் கட்சியின் தலைவரென்ற வகையில் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக 15 வாரங்கள் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் மிகத் தெளிவாக எங்களுடைய அமைப்பிற்கு இந்தியா மற்றும் மேற்கு தொடர்பாக ஏனைய சர்வதேச வல்லரசுகள் தொடர்பாக இருக்கக் கூடிய பார்வைளை நாங்கள் எழுத்திலும் போட்டிருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் இருந்து எங்களிடத்தே ஒரு மாற்றமும் கிடையாது. நாங்கள் இன்றைக்கு ஒன்றைக் கதைத்துவிட்டு நாளைக்கு ஒன்றைக் கதைப்பது இல்லை.

எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவினுடைய நலன்கள் பேணப்பட வேண்டுமென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. இந்தியாவிற்கு இலங்கைத் தீவு என்பது ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சனை. வெறுமனே பொருளாதார ரீதியாக அனுகிற ஒரு விடயமல்ல. இங்கே அவர்கள் முதலீட்டைச் செய்து தங்கள் கம்பனிகளைக் கொண்ட வந்து இறக்குகிற கோணத்தில் செயற்படுகிற விடயமுமல்ல. அது சில வேளைகளில் வேறு நாடுகளுக்கு அப்படி இருக்கலாம்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்களுடைய தென் எல்லையில் இருக்கக் கூடிய தீவு என்ற வகையிலும் அவை எல்லாத்திற்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்ற வல்லரசு என்ற வகையில் இலங்கைத் தீவில் வேறொரு நாடு அதுவும் இந்தியாவிற்குப் போட்டியாக இருக்கக் கூடிய வல்லரசு வேரூன்றுகிறது என்பது அவர்களுக்கு ஒரு பாதுகாப்புபப் பிரச்சனை. தேசிய பாதுகாப்பு பிரச்சனை. இதெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்வது என்னவெனில் இந்தியாவினுடைய நலன்கள் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தமிழீழ தாயக நிலப்பரப்பு எந்தவொரு இடத்திலும் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைகயில் செயற்படுத்தாமல் தடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் இந்தியா அதை உணர்ந்து தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும். தமிழ்த் தேசத்துடைய எங்களுடைய இருப்பையும் அங்கீகரிக்க வேண்டும். எங்களுடைய இருப்பு அங்கீகரிக்கப்படுகிற பட்சத்தில் மட்டும் தான் இந்தியாவுடைய தேசிய நலன்களும் பாதுகாப்பு விடயங்களும் பாதுகாக்கப்படும் என்பதை இந்தியா விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தியா வெறுமனே எங்களைப் பாவித்துவிட்டு எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெறுமனே சிங்களவர்களோடு ஒரு நட்பை பேணி சிங்களவர்கள் எங்களை எதிராகப் பார்க்கிற படியால் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிங்களவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து நாங்கள் ஏதோ ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13 ஆம் திருத்தத்தையோ அல்லது மாகாண சபையையோ தீர்வாக ஏற்றுக் கொள்ளச் சொல்லிக் கேட்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே எங்களுடைய கொள்கை என்பது இந்தியாவினுடைய நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் எங்களுடைய நலன்களும் முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதில் விட்டுக் கொடுப்புக்கள் செய்யேலாது. ஆக் இந்தியா ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய இடத்திற்கு நாங்கள் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
அது தான் எங்களுடைய கொள்கை. வெறுமனே ஒரு தரப்பின் நலன்களை மட்டும் பேணி மற்றத் தரப்பிற்கு பாதிப்பு வரக் கூடிய வகையில் செயற்படுவதற்கு நாங்கள் இணங்க முடியாது என்பதில் நாங்கள் மிகத் தெளிவு.

இந்த வாக்குறுதிகளை நாங்கள் நேரடியாக இந்தியத் தரப்புகளுக்கும் வழங்கியும் இருக்கிறோம். அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு வல்லரசு தன்னுடைய தேவைகளை அடைவதற்கு தங்களுக்கு விரும்பிய எடுபிடிகளைத் தான் விரும்புவார்கள். அது சர்வ சாதாரணம். மேற்கு நாடகளும், இந்தியாவும், சீனாவும் அப்படித் தான் செயற்படுவார்கள்.

இன்றைக்கு சீனா எடுத்தக் கொண்டால் அது தன்னுடைய நலன்களைப் பேணுவதற்கு ஒரு எடுபடி அமைப்பை அரச நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்த வல்லரசுகள் அப்படித் தான் இயங்கப் பார்க்கும். எங்களைப் பொறுத்தவரையில்; எங்களுக்கென்று ஒரு கொள்கையை நாங்கள் வைத்திருக்க வேண்டும். எங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறுமனே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை எங்கள் மக்கள் மீது திணிக்கிறதற்கான தரப்புக்களை நாங்கள் தொடர்ந்தும் தெரிவு செய்யப் போகின்றோம் என்றால் அது முன்னேற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்துவது கிடையாது.

இன்றைக்கு உங்களுக்கு நன்றாகத் தெரியும் தமிழ் தலைவர்கள் என்று சொல்லி பத்து வருசமாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தான் உண்மையில் கூட்டமைப்பினர் செயற்பட்டவர்கள். வேறு எந்த தரப்புகளோடும் எந்த அரசும் பேசவில்லை. ஆனால் அந்த தரப்பு முற்று முழுதாக இந்திய, மேற்கு நாடுகள் விரும்பிய வகையில் செயற்பட்டது.

இந்த நாடுகள் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஏதோவொரு வகையில் கருத்தில் எடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ஆகவே அவர்கள் விரும்பினபடி நாங்கள் செயற்பட்டால் தான் எங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்றும் கூறினர். ஆனால் இன்றைக்கு ஏதும் முன்னெற்றம் கிடைத்திருக்கா? இன்றைக்கு தமிழ் மக்கள் பத்த வருசத்திற்குப் பின்னரும் முன்னெற்றம் இருக்கோ ஆகவே இந்த யதார்தத்தத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே நாங்கள் சர்வதேச அரசியலை கையாள தயாரில்லாமல் வெறுமனே யாரினதும் ஒரு முகவர்களாக நாங்கள் இருக்கப் போகின்றோம் என்றால் ஒரு நாளும் தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்க்கின்ற போது நாங்கள் ஒரு முன்னெற்றத்தையும் அடைய முடியாது. ஆகவே அந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வெண்டும்.

விமர்சமனம் என்றால் எதிரி அல்ல. நாங்கள் விமர்சிக்கிறது அந்தப் பிழைகளை சரிப்படுத்தி முன்னுக்குப் போறதற்காக தான். அதை எதிரியாகச் சித்தரிப்பது திட்டமிட்டு எங்களையும் இந்தியாவையும் முரண்பட வைப்பதற்கான முயற்சியே தவிர அது ஒரு பொழுதும் அதாவது அப்படிச் சித்தரித்தாலும் நாங்கள் இந்தியாவை எதிரியாகப் பார்க்கப் போறதும் இல்லை.; நாங்கள் இந்தியாவின் எதிரிகள் இல்லை என்று இந்தியாவிற்கும் அது நன்றாகத் தெரியும்.

மேலும் இந்திய மேற்கு நாடுகளுக்கு இலங்கைத் தீவில் வந்திருக்கின்ற புதிய ஆட்சி கடும் சவாலாகத் தான் இருக்கப் போகிறது. கோட்டாபாய ராஐபக்சவின் ஆட்சி என்பது உண்மையில் மகிந்த ராஐபக்சவின் ஆட்சியினுடைய தொடர்ச்சி தான். மகிந்த ராஐபக்ச ஆட்சியில் பத்து வருசமாக இருந்த காலத்தில் எப்படி அவர்களுடைய கொள்கைகள் சீனாவை இலங்கைத் தீவில் வேருன்ற வழிவகுத்ததோ அந்த வேரூன்றல் தொடர்ச்சியாக இலங்கைத் தீவில் இருந்து சீனாவை வெளியேற்ற முடியாத அளவிற்கு இலங்கையில் பிடி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அந்த பிண்;னணியில் தான் கடந்த 2015 இல் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அந்த 2015 ஆட்சி மாற்றம் மேற்கு இந்தியா சார்ந்ததாக இருந்தாலும் கூட முன்னர் இருந்த மகிந்த ராஐபக்சவின் பத்து வருட ஆட்சியில் எடுத்த முடிவுகளால் சினாவினுடைய பிடியில் இருந்து இலங்கையை அவர்கள் வெளியில் எடுக்க முடியவில்லை. இன்றைக்கு கோட்டாபய ராஐபக்ச இருக்கிற நிலைமையில் உண்மையில் அவர்கள் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ச்சியாக கொண்டு போனாலே வந்து சீனாவினுடைய ஆதிக்கம் இலங்கையில் கூடிக் கொண்டே தான் இருக்குமே தவிர குறையப் போவதில்லை. அது தான் இன்றைய யதார்த்தம்.

இந்த வகையில் இந்தியா மேற்கு நாடுகளும் இதில் இருந்து ஒரு பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. அது தமிழரைப் பயன்படுத்தி தான் அந்த அழுத்தங்களை இலங்கை அரசில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் முயற்சிப்பார்கள் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

கடந்த ரர்ஐபக்சவின் ஆட்சிக் காலத்தில் பத்து வருசமாக தமிழ் மக்களின் இனப்படுகொலை என்ற விடயத்தை வைத்து தான் nஐனிவாவில் அழுத்தங்களைப் போட்டார்கள். நாங்கள் அந்த நேரம் முயற்சிகளை விமர்சித்தத்தற்கான காரணம் nஐனிவாவின் அரங்கு தமிழ் மக்களுக்கான ஒரு பொறுப்புக் கூறலைக் கொடுக்கப் போறதில்லை. அந்த அரங்கு தான் பிழை. ஆனால் மேற்கு இந்திய நாடுகள் அந்த அரங்கை விரும்பினார்கள். அதனூடாக உண்மையில் சிங்கள மக்களுக்கு ஒரு எல்லையை தாண்டி பொறுப்புக் கூறலைச் செய்யப் போறதில்லை. மாறாக அழுத்தத்தைத் தான் கொடுத்தக் கொண்டிருந்தார்கள்.

அந்த அழுத்தம் என்பதைத் தாண்டி தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறல் நடக்க வேண்டுமாக இருந்தால் nஐனிவா என்ற களத்தைத் தாண்டி பாதுகாப்புச் சபையூடாக ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு போயே ஆக வேண்டுமென்பது தான் எங்களுடைய கருத்தாக இருக்கின்றது. அதை சாத்தியப்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைத்துவம் அந்த விடயத்தில் உறுதியாக இருந்தே ஆக வேண்டும்.;

ஆனால் இந்த தலைமைத்துவம் கடந்த பத்து வருசங்களாக அந்த நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்காததால உண்மையிலே இந்த பத்து வருசத்தில் யார் யார் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட வேண்டுமென்று நாங்கள் நினைத்தோமோ அந்தத் தரப்புக்களை; பத்து வருசமாகப் பாதுகாத்து அவர்கள் ஆட்சி பிடிக்கும் அளவிற்கு நிலைமைகள் இன்று மோசமாக போயிருக்கிறது.

ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் வல்லரசுகளுக்கு இன்றைக்கும் தமிழ் அரசியலையும் இனப்படுகொலைiயும் பாவிப்பதற்கு தேவை இன்னும் அதிகரித்துக் கொண்டாலும் கேள்வி என்னவென்றால் வெறுமனே எங்களைப் பாவிப்பதற்கு தமிழ் மக்களாககிய நாங்கள் அனுமதிக்கப் போகிறோமா அவர்கள் எங்களது பிரச்சனைகளை கையிலெடுக்க நாங்களும் உண்மையான பொறுப்புக் கூறலையும் அரசியற் தீர்வையும் பெறுவதற்கு நாங்கள் ஒரு திட்டத்தை வகுக்க போகிறோமா என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆனால் அதில் தான் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம் அதாவது எங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்மக்களின் நலன்களில் விட்டுக் கொடுப்புக்கள் எதனையும் செய்ய முடியாது. தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறலில் இனப்படுகொலை என்ற விடயத்தை எவரும் கையில் தூக்கப் போகின்றனர் என்றால் தமிழ் மக்களுக்கு அதில் பொறுப்புக்கூறல் சர்வதேச விசாரணை ஊடாக நடந்த இனப்படுகொலைக்கு நீதி பெறக் கூடிய ஒரு அனுகுமுறையை நாங்கள் கடைப்பிடிப்பதற்கு நாங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். அதைத் தவிர்த்த்து வெறுமனே அந்த பிரச்சனையை பயன்படுத்தி அழுத்தத்தைக் கொடுத்து சிங்கள தேசத்தில் இருக்கக் கூடிய அரசியலை கையாள்வற்கு மட்டும் ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post