தமிழில் பல படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான ஓவியா ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்துள்ளார்.
ஓவியா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்குகிறார். தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதுடன் அவ்வப்போது கருத்துக்களும் பகிர்கிறார்.
சமீபத்தில் 'வாழ்க்கைக்கு அர்த்தமில்லை' என்ற ஒரு பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதை கண்ட ரசிகர்கள் ஓவியா மனவருத்தத்தில் இருப்பதாக எண்ணினர்.
அவருக்கு ஆறுதல் கூறுவதுபோல் பதில் பகிர்ந்தனர். 'கவலை வேண்டாம் நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும்' என்று ஒரு ரசிகர் ஓவியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஓவியா 'அடப் பாவிகளா.. நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை' என பதில் அளித்தார்.
Post a Comment