தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதுடன் வடக்கிற்கு விஜயம் செய்யுமாறும் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற 6ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் முக்கிய அதிதியாக பங்கேற்றார். இதனையடுத்தே அவர் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தமிழக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மற்றும் தமிழக புதுச்சேரி நீதித்துறை குழுவினருடன் தனித்தனியாக முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
எழும்பூரில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சந்திப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு பங்கேற்கவுள்ளது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளான ஹரிபரந்தாபன் ஏ.கே.ராஜன் சண்முகம் விமலா அக்பர் அலி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இச்சந்திப்பினையடுத்து நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்கின்றனர்.
இச்சந்திப்பின்போதுஇ இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக சட்டரீதியான அனுகுமுறைகள் ஊடாக இந்திய மத்திய அரசு மற்றும் சர்வதேச தரப்புக்களை கையாள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரன் - ரஜனிகாந் சந்திப்பு
Published byYarl Voice Editor
-
0
Tags
Trending
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Post a Comment